காஷ்மீரில் ராணுவ வீரர் யாசீன் முகமது கடத்தப்படவில்லை

152

புல்வாமா தாக்குதலை தொடர்ந்து இந்திய விமானப்படை பயங்கரவாதிகள் முகாம்கள் மீது நடத்திய பதில் தாக்குதலால், ஜம்மு-காஷ்மீரில் பதற்றமான சூழல் நிலவியது.

இந்த நிலையில் இந்திய ராணுவத்தின் ஜாக்ளி என்ற படைப்பிரிவை சேர்ந்த வீரர் யாசின்முகமது, விடுமுறைக்காக வீட்டிற்கு சென்ற போது பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் ராணுவ வீரர் யாசின் முகமது கடத்தப்படவில்லை என்றும், அவர் பத்திரமாக இருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. புட்காம் பகுதியில் ராணுவ வீரர் கடத்தப்பட்டதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளது.