“உங்களது ஆட்சி சிறப்பாக தொடர வேண்டும்” – கெஜ்ரிவாலுக்கு பிரதமர் டுவிட்டரில் வாழ்த்து

168

டெல்லி முதலமைச்சராக 3-வது முறையாக பதவியேற்ற அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் அமோக வெற்றி பெற்றது மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது. இந்நிலையில் டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் முதலமைச்சர் பதவியேற்பு விழா நேற்று நடைபெற்றது. காலை 10 மணியளவில் நடைபெற்ற விழாவில் கெஜ்ரிவால் டெல்லி முதலமைச்சராக 3-வது முறையாக பதவியேற்றார்.

இதனிடையே, முதலமைச்சராக பதவியேற்ற அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், உங்களது ஆட்சி சிறப்பாக தொடர வேண்டும் என பதிவிட்டுள்ளார். இதற்கு நன்றி தெரிவித்த முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மத்திய அரசுடன் இணைந்து செயல்பட தயார் என்று குறிப்பிட்டார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of