ரபேடாவின் அனல் பறக்கும் பந்து வீச்சி.., வெற்றியை தன்வசமாக்கிய டெல்லி

449

அனல் பறக்கும் ஐபிஎல் போட்டியின் 30 வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணியும், டெல்லி அணியும் ஐதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் இன்று பல பரிட்சை மேற்கொண்டனர்

இதில், டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.இதையடுத்து, டெல்லி அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர்களாக பிரித்வி ஷா, ஷிகர் தவான் ஆகியோர் இறங்கினர்.

கடந்த போட்டியில் சிறப்பாக ஆடிய தவான் இந்த முறை 7 ரன்னிலும், பிரித்வி ஷா 4 ரன்னிலும் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர்.

அடுத்து இறங்கிய காலின் முன்ரோ அதிரடியாக ஆடி 24 பந்தில் 3 சிக்சர், 4 பவுண்டரியுடன் 40 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அவரை தொடர்ந்து இறங்கிய கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் நிதானமான ஆட்டத்தை வெளிபடுத்தி அணிக்கு தேவையானா அணிகளை சேர்க்க தொடங்கினார். அவரும் 45 ரன்னில் வெளியேறினார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்த ரிஷப் பன்ட் 23 ரன்னில் தனது விக்கெட்டை இழந்தார்.இறுதியில், டெல்லி அணி கொடுக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 155 ரன்களை எடுத்துள்ளது. ஐதராபாத் அணி வெற்றிபெற 156 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

ஐதராபாத் அணி சார்பில் கலீல் அகமது 3 விக்கெட்டும், புவனேஷ்வர் குமார் 2 விக்கெட்டும், அபிஷேக் சர்மா, ரஷித் கான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்பு ஐதரபாத் அணியின் அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்த வார்னர், ஜான்னி களமிறங்கினர். இவர்கள் ஆரம்பம் முதலே டெல்லி அணியின் பந்துகளை வானில் பறக்க வைத்தார். இவர்களின் கூட்டணியை பிரிக்க முடியாமல் டெல்லி அணியின் பந்துவீச்சாளர்கள் தடுமாறி வந்தனர்.இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட ஐதரபாத் அணியினர் அதிரடியை காட்டினர். இதில் அணியின் வெற்றிக்கு தேவையான ரன்கள் மெல்ல உயரத்தொடங்கினர். இந்த நேரத்தில் ஜான்னி 41 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

அடுத்த வந்த வில்லியம்சன் அவரும் வார்னருக்கு துணை நிற்காமல் சொர்ப்ப ரன்களில் வெளியேறினார். பின்பு வந்த வீரர்களும் தாங்கள் வந்த வேகத்திலே ஆட்டமிழந்து வெளியேறினர். ஆட்டத்தின் ஆரம்பத்தில் ஐதரபாத் அணி ரன்களை குவித்தனர்.ஆனால் இந்த ஆட்டத்தை டெல்லி அணியின் பந்து வீச்சாளர்கள் மாற்றினர். டெல்லி அணியின் ஆதிக்கம் தொடர ஆரம்பித்தனர். இவர்களின் பந்து வீச்சில் வார்னர் தனது அரை சதத்தை பதிவு செய்து அவரும் ஆட்டம் இழந்தது.

டெல்லி அணியின் அபார பந்து வீச்சால் 18.5 ஓவர்களில்(116) ஐதரபாத் அணியின் அனைத்து விக்கெட்டுகளை கைப்பற்றி 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.

டெல்லி அணி சார்பில் ரபேடா 4 விக்கெட்டுகளையும், மோரிஸ், பவுல் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of