பிளாஸ்மா வங்கியை தொடங்கி வைத்த அரவிந்த் கெஜ்ரிவால்

253

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் டெல்லி 3வது இடத்தில் உள்ளது.  இங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில், டெல்லியில், கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பிளாஸ்மா வங்கி அமைக்கப்படும் என முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார்.

அதன்படி, ILBS மருத்துவமனையில், அமைக்கப்பட்டுள்ள பிளாஸ்மா வங்கியை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

இதன்மூலம், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள எந்த நோயாளியும் பிளாஸ்மாவை பெற்றுக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of