கிறிஸ்டியன் மைக்கேலுக்காக ஆஜரான வழக்கறிஞர் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கம்

291

இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேலுக்காக நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர் அல்ஜோ ஜோசப் காங்கிரஸ் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

துபாயில் இருந்து நாடு கடத்தப்பட்டு இந்தியா கொண்டு வரப்பட்ட இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேலை டெல்லி விமான நிலையத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.

இதையடுத்து அவரை மருத்துவ பரிசோதனைக்கு பிறகு டெல்லி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அப்போது இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல் சார்பில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் அல்ஜோ ஜோசப் நீதிமன்றத்தில் ஆஜரனார்.

இந்நிலையில் காங்கிரஸ் இளைஞர் அணியில் இருந்த வழக்கறிஞர் அல்ஜோ ஜோசப் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.