கடந்த 24 மணி நேரத்தில் 1,298 பேருக்கு கொரோனா..! -டெல்லியை மிரளவைக்கும் பாதிப்பு..!

535

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,298 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

டெல்லியில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் மற்றும் பலியானோர் பற்றிய சமீபத்திய தகவல்களை டெல்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

இதன்படி, அங்கு கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,298 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 22,132 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 11 பேர் பலியானதைத் தொடர்ந்து மொத்தம் பலியானோர் எண்ணிக்கை 556 ஆக உயர்ந்துள்ளது.

அதேசமயம், இன்று ஒரேநாளில் 497 பேர் குணமடைந்துள்ளனர்.

இதுவரை மொத்தம் 9,243 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் 12,573 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Advertisement