“டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் சவாலை எற்கிறேன்”

310

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் சவாலை ஏற்பதாகவும், விவாதம் நடத்துவதற்கான நேரத்தையும் இடத்தையும் சொல்லுமாறு மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான பா.ஜ.க முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்க முடியுமா என்று சவால் விடுத்த அரவிந்த் கெஜ்ரிவால், பா.ஜ.க. முதல்வர் வேட்பாளருடன் எத்தகைய விவாதத்திற்கும் தான் தயாராக இருப்பதாக கூறினார்.

 

இந்நிலையில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் சவாலுக்கு தான் தயார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். நேரத்தையும், இடத்தையும் சொன்னால் விவாதம் நடத்த தயார் என்றும், இதற்காக முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியுள்ளார்.