டெல்லி தேர்தல்: தொடர்ந்து முன்னிலையில் ஆம் ஆத்மி.. டஃப் கொடுக்கும் பாஜக.. மோசமான நிலையில் காங்கிரஸ்..!

373

டெல்லி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் எடுத்த எடுப்பிலேயே ஆம் ஆத்மி கட்சி எதிர்பாராத அளவிற்கு முன்னிலை வகித்து வருகிறது.

டெல்லி சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 8 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

முதற்கட்டமாக தபால் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. ஆரம்பம் முதலே வாக்கு எண்ணிக்கையில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை வகித்தது. இதனையடுத்து முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

இந்த வாக்கு எண்ணிக்கையிலும் ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. அடுத்த கட்டமாக பாஜக முன்னிலை வகித்து வருகிறது. பல தொகுதியில் சொற்ப வாக்குகளில் பாஜக,ஆம் ஆத்மி கட்சியிடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

காங்கிரஸ் வரலாறு காணாத அளவிற்கு பின்னடைவிற்கு சென்றுள்ளது. ஒரு இடத்தில் மட்டும் முன்னிலை வகித்து வருகிறது.

ஆம் ஆத்மி கட்சி 53 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. பாஜக 16 இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது. விறுவிறுப்பாக நடந்துவரும் வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் பிற்பகலுக்குள் ஆட்சியை பிடிப்பது யார் என்ற கேள்விக்கு விடை தெரிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.