டெல்லியில் மின் விசிறி தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

டெல்லியின் மேற்கு பகுதியில் உள்ள மோதி நகரில் மின் விசிறி தயாரிப்பு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையின் கட்டிடம் நேற்று இரவு பயங்கர வெடி சத்தத்துடன் இடிந்து தரைமட்டமானது. தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 8 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொழிற்சாலையில் காஸ் சிலிண்டர்கள் வெடித்ததால் விபத்து நிகழ்ந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of