டெல்லி விபத்து : 3டி ஸ்கேன் தொழில்நுட்பம் மூலம் போலீசார் ஆய்வு

178

டெல்லியில் 43 பேரை பலி வாங்கிய தீ விபத்து நடந்த கட்டிடத்தில். 3டி ஸ்கேன் தொழில்நுட்பம் மூலம் ஆய்வு செய்து, விபத்துக்கான ஆதாரங்களை போலீசார் சேகரித்தனர்.

வடக்கு டெல்லியின் ஜான்சி ராணி சாலையில் உள்ள அனஜ் மண்டி பகுதியில் 4 மாடி கட்டிடம் ஒன்று உள்ளது. இதில் பல்வேறு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்த கட்டிடத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையில் நேற்று முன்தினம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த கொடூர விபத்தில் உடல் கருகியும், மூச்சுத்திணறல் ஏற்பட்டும் 43 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

16 பேர் படுகாயமடைந்தனர்.தீ விபத்து தொடர்பாக கட்டிடத்தின் உரிமையாளர் ரேஹான் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த சம்பவம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட்ட மாநில அரசு, ஒரு வாரத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தி உள்ளது. இந்த நிலையில் தீ விபத்து நடந்த கட்டிடத்தில் டெல்லி போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

நேற்று அவர்கள் மொத்த கட்டிடத்தையும் 3டி ஸ்கேன் தொழில்நுட்பம் மூலம் ஆய்வு செய்து, விபத்துக்கான ஆதாரங்களை சேகரித்தனர்.இதைப்போல தடயவியல் துறையை சேர்ந்த அதிகாரிகள் குழு ஒன்றும் கட்டிடத்தை பார்வையிட்டு மாதிரிகளை சேகரித்தது.இதற்கிடையே தீ விபத்து ஏற்பட்ட அந்த 4 மாடி கட்டிடத்தில் நேற்று காலையில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of