டெல்லி தீ விபத்தில் உயரும் பலி எண்ணிக்கை..! இரங்கல் தெரிவித்த தலைவர்கள்

662

டெல்லியில் ஜான்சி ராணி சாலையில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 43-ஆக உயர்ந்துள்ளது.

டெல்லி ராணி ஜான்சி சாலை, அனஜ் மண்டி பகுதியில் உள்ள தொழிற்சாலையில் அதிகாலை 5.22 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தொடர்ந்து, தீ அருகில் உள்ள கடைகளில் பரவியது.

மின்சாரம் தொடர்பான பாதிப்பினால் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. தீயை அணைக்கும் பணியில் 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.

தீ விபத்தில் இருந்து 50-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் சுமார் 50 பேர் அனுமதிக்கப்பட்ட நிலையில் பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தீ விபத்தில் 43 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நிகழ்ந்த தீ விபத்தில் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தீவிபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தனருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Advertisement