கேஜ்ரிவாலா? – ஆளுநரா? – யாருக்கு அதிகாரம் – குழம்பிய நீதிபதிகள்

459

டெல்லி அரசு – துணை நிலை ஆளுனர் இடையேயான அதிகார மோதல் குறித்து இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியுள்ளனர்.

புதுச்சேரியில் துணை நிலை ஆளுனர் – புதுச்சேரி அரசு இடையேயான அதிகார மோதல் தற்பொழுது நீடித்து வருகிறது. இதே போன்று டெல்லி அரசு – துணை நிலை ஆளுனர் இடையேயான அதிகார மோதலும் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் இது தொடர்பான வழக்கில் இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். இரண்டு நீதிபதிகள் வழங்கிய இந்த தீர்ப்பில், இருவேறு மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கினர். விசாரணை ஆணையம் அமைக்க மாநில அரசிற்கு உரிமையுண்டு என ஒரு நீதிபதி கூறினார். ஆனால் மற்றொரு நீதிபதி விசாரணை ஆணையம் அமைக்க உரிமையில்லை என கூறினார்.

இதனால் யாருக்கு அதிகாரம் என்ற குழப்பம் மீண்டும் நீடிக்கத் துவங்கியுள்ளது. இதனால் இந்த வழக்கை மூன்றாவது நீதிபதிக்கு மாற்றி உத்தரவிட்டனர்.

இந்த மாறுபட்ட தீர்ப்பால் மத்திய மாநில அரசுகளின் அதிகாரம் என்னென்ன என்பது குறித்து குழப்பம் ஏற்பட்டுள்ளது.

Advertisement