செமஸ்டர் தேர்வுகள் ரத்து..! அரசு அதிரடி..! தமிழகத்தில் நடக்குமா..?

304

நாட்டிலேயே கொரோனா பாதிப்பில் மூன்றாவது இடத்தை டெல்லி வகிக்கிறது. தொடர்ந்து கொரோனா பரவல் அதிகரித்து வரும்நிலையில் கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் தொடர்பான அறிவிப்பை துணைமுதல்வர் மனீஷ் சிசோடியா வெளியிட்டார்.

இதன்படி, தற்போது தேர்வுகள் நடத்தமுடியாத சூழ்நிலை இருப்பதாக கூறினார். செப்டம்பர் மாதத்திற்குள் தேர்வுகளை நடத்தவேண்டும் என அறிவித்துள்ள  பல்கலைக்கழக மானியக்குழுவின் வழிகாட்டுநெறிமுறைகளை பின்பற்ற இயலாது என்றும் அவர் தெரிவித்தார்.

இதனால், அனைத்து பல்கலைக்கழகங்களுக்கு உட்பட்ட கல்லூரிகளிலும் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் உள்பட அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக சிசோடியா கூறினார்.

பல்கலைக்கழகங்கள் முடிவு செய்யும் மதிப்பீடுகளின் அடிப்படையில் பட்டங்களை வழங்குவதற்கு முடிவு செய்திருப்பதாகவும் துணை முதல்வர் மனீஷ் சிசோடியா அறிவித்தார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of