இப்படி செய்யாதீங்க.. ஒரு கோடி அபாராதம் விதிச்சுடுவாங்க..

1841

டெல்லியில் தொடர்ந்து காற்று மாசு மிகவும் அதிகமாக உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தொடரப்பட்ட பொதுநல வழக்குகளை உச்சநீதிமன்றம் விசாரித்தது.

அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர், அண்டை மாநில விவசாய நிலங்களில் பயிர் கழிவுகளை எரிப்பதால்தான் காற்று மாசு அதிகமாகிறதா என்பது குறித்து கண்காணித்து கட்டுப்படுத்த விரிவான சட்டத்தை மத்திய அரசு விரைவில் கொண்டு வரவுள்ளது என தெரிவித்தார்.

இந்நிலையில், டெல்லி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் காற்று மாசை தடுக்க மத்திய அரசு அவசர சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததையடுத்து, உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

அரசு உத்தரவை மீறி யாராவது காற்று மாசு ஏற்படுத்தினால், இந்த சட்டத்தின்கீழ் ஒரு கோடி ரூபாய் வரை அபராதம் அல்லது 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், காற்று மாசை தடுப்பதற்காக தனியாக ஒரு வாரியம் அமைக்கவும் அவசர சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Advertisement