அமைச்சர்களை மிரட்டும் கொரோனா; டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்தியேந்திர ஜெயினுக்கு பாதிப்பு உறுதி

250

கொரோனா வைரஸ் தாக்கம் கடந்த சில வாரங்களாக இந்தியாவில் உச்சத்தில் இருந்து வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் சுமார் 10,000 பேர் வரை பலியாகி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் சாதாரண பொதுமக்களை மட்டுமின்றி பிரபலங்களையும் விட்டுவைக்காமல் தாக்கி வருகிறது.

இந்த நிலையில் டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்தியேந்திர ஜெயினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அமைச்சருக்கு காய்ச்சல் தீவிரமாக இருந்த நிலையில் அவர் இரண்டாவது முறையாக கொரோனா பரிசோதனை செய்து  கொண்டார். இதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. முன்னதாக அவர் சோதனை செய்தபோது முடிவு நெகடிவாக வந்தது குறிப்பிடத்தக்கது. இதன்பின்னர்,  அவருக்கு கொரோனா பாதித்ததற்கான அறிகுறிகள் அதிகம் இருந்தன.  இதையடுத்து அவர் பரிசோதனை செய்து  கொண்டார்.

இதேபோன்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரான அதிஷிக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. நேற்று முன்தினம் இரவு காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக சத்யேந்திர ஜெய்ன் டெல்லி ராஜிவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சத்யேந்திர ஜெயின் நேற்று ட்விட்டரில் ஒரு பதிவிட்டார். அதில் அவர், கடும் காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ராஜிவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அட்மிட் ஆகியுள்ளேன் என்று கூறியுள்ளார்.

தமிழகத்தில் திமுக எம்எல்ஏ ஜெ அன்பழகன் அவர்கள் கொரோனாவால் பலியாகி உள்ளார் என்பதும் ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of