ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்பனை செய்ய தடை

450

ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்பனை செய்வதற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படும் மருந்துகள் மருத்துவரின் பரிந்துரையின்றி வழங்கப்படுவதாகவும், இதனால் நோயாளிகள் பலர் பாதிக்கப்படுவதாகவும், டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ராஜேந்திர மேனன் மற்றும் வி.கே.ராவ், ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்பனை செய்வதற்கு தடை விதித்தனர். மேலும் இந்த உத்தரவை உடனடியாக அமல்படுத்துமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.