டெல்லி நட்சத்திர ஹோட்டலில் பயங்கர தீ விபத்து – பலி எண்ணிக்கை 17 ஆக உயர்வு

97
fire delhi

டெல்லியில் செயல்பட்டு வரும் அர்பிட் பேலஸ் என்னும் ஹோட்டலில் திடீரென ஏற்பட்ட பயங்கர  தீவிபத்தில் சிக்கி  17 பேர் உயிரிழந்தனர். தீயணைப்புத் துறையினர் தற்பொழுது மீட்புப் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

டெல்லியின் கரோல் பாக் பகுதியில் செயல்பட்டு வரும் அர்பிட் பேலஸ் ஹோட்டலில் இன்று அதிகாலை திடீரென தீவிபத்து ஏற்பட்டது.

மேற்பகுதியில் ஏற்பட்ட தீ , மளமளவென பரவி ஓட்டலின் மேற்பகுதி முழுவதுமாக சூழ்ந்து கொண்டது. இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர், தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்த தீவிபத்துக்கு இதுவரை 17 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தீவிபத்தில் மேலும் சிலர் உயிரிழந்திருக்கலாம் என மீட்பு படையினர் அச்சம் தெர்விக்கின்றனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதுமட்டுமின்றி இந்த தீவிபத்து  மின்கசிவு காரணமாக ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.