உச்ச நீதிமன்றத்தின் 46-வது தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் பதவியேற்றார்

675

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தின் 45-வது தலைமை நீதிபதியாக இருந்த தீபக் மிஸ்ரா நேற்றுடன் ஓய்வு பெற்றார். இந்நிலையில் தீபக் மிஸ்ராவின் பரிந்துரையின்படி, உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் நியமிக்கப்பட்டார். இன்று காலை நடைபெற்ற பதவியேற்பு விழாவில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், ரஞ்சன் கோகாயிக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் துணை குடியரசுத்தலைவர் வெங்கையா  நாயுடு, பிரதமர் மோடி ஆகியோர் கலந்து கொண்டனர்.

உச்ச நீதிமன்றத்தின் 46வது தலைமை நீதிபதியாக பதவி ஏற்கும், ரஞ்சன் கோகாய் அடுத்து ஆண்டு நவம்பர் 17ஆம் தேதி வரை பதவியில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வடகிழக்கு மாநிலத்தை சேர்ந்த ஒருவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்பது இதுவே முதல் முறையாகும்.

தலைமை நீதிபதியாக பதவி ஏற்க உள்ள ரஞ்சன் கோகாய், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க உத்தரவிட்டது என பல அதிரடி தீர்ப்புகளை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement