டெல்லியில் புதிய தளர்வுகளை அறிவித்த முதல்வர் | Delhi | Lockdown | Arvind Kejriwal

174

டெல்லியில் வாரச் சந்தைகள் இனி வழக்கம்போல் செயல்படும் என்றும் தியேட்டர்கள் அக்டோபர் 15 முதல் திறக்கப்படும் எனவும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் 5 மாநிலங்களில் டெல்லியும் ஒன்று. கடந்த சில வாரங்களாக அங்கு, தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. இதுவரை சுமார் 3 லட்சம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் சுமார் 95% பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ‘

20 ஆயிரம் பேருக்கு மேல் சிகிச்சையில் உள்ளனர். இந்த நிலையில் மத்திய அரசு அறிவித்துள்ள ஐந்தாம் கட்ட ஊரடங்கு தளர்வை டெல்லி அரசு படிப்படியாக செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் மாநிலத்தில் வார சந்தைகளை இனி வழக்கம்போல் திறக்கலாம் என முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். அதேபோல் அக்டோபர் 15 முதல் அரசு வழிகாட்டுதல்படி டெல்லியில் திரையரங்குகள் செயல்பட உள்ளன. ஒரு இருக்கை விட்டு ஒருவர் என அரங்கில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.

Advertisement