டிவி சத்தம் குறைக்க சொன்னது தப்பா.. சோகத்தில் மூழ்கிய ரவுடியின் குடும்பம்..!

1897

டெல்லியில் உள்ள படோலா கிராமத்தில், சுஷில் சாந்த், சுனில், அனில் ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இதில், சுஷில் சாந்த் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள், தங்களது வீட்டில் அதிக சத்தத்துடன் பாடல் கேட்டு வந்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த சகோதரர்கள் 3 பேரும், அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றிய நிலையில், பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள், சகோதரர்கள் 3 பேரையும் கத்தியால் கடுமையாக தாக்கினர்.

இதில் பலத்த காயமடைந்த சுஷில் சாந்த், மருத்துவமனையில் உயிரிழந்தார். மற்ற இரண்டு பேரும் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், சம்பந்தப்பட்டவர்கள் 3 பேரை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள 2 பேரையும் தேடி வருகின்றனர்.

Advertisement