நாட்டின் நலன் காக்க எந்த கடுமையான முடிவையும் எடுக்க மத்திய அரசு தயார்

440
Narendra modi

டெல்லியில் இருபத்தி இரண்டு ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டப்படுள்ள சர்வதேச கருத்தரங்க மற்றும் பொருட்காட்சி மையத்திற்கு பிரதமர் மோடி நேற்று அடிக்கல் நாட்டினார்.

அப்பேது பேசிய மோடி, நாட்டில் தற்போது விற்பனையாகும் செல்போன்களில் என்பது சதவிகிதம் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டது எனவும் இதன் மூலம் ஆண்டுக்கு 3 லட்சம் கோடி ரூபாய் அன்னிய செலாவணி மிச்சமாவதாகவும் கூறினார்.

மேலும், தகவல் தொழில் நுட்பம் மற்றும் சில்லறை வர்த்தக துறையில் வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளதாக குறிப்பிட்ட பிரதமர், நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் உயர்ந்துள்ளதாக தெரிவித்தார்.