தமிழகத்தை சேர்ந்த 7 பேருக்கு பத்ம விருது…

301

பல்வேறு துறைகளில் பல சாதனைகளை படைப்போருக்கு ஆண்டுதோறும் பத்ம விருதுகள் வழங்கப்படுவது வழக்கும். அந்த வகையில் இந்தாண்டுக்கான விருது பெறுவோரின் பட்டியல் குடியரசு தினத்தை முன்னிட்டு கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது.

இதில் மத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்மவிபூஷண் என மொத்தம் 112 பேருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் முதல் கட்டமாக 56 பேருக்கு இன்று விருது வழங்கப்பட்டது.

ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், இந்த விருதுகளை வழங்கி கவுரவித்தார்.

prabhu-deva shankar-mahadevan

அதுமட்டுமின்றி, இந்நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி மற்றும் மத்திய மந்திரிகள் பங்கேற்றனர்.

இதில் மலையாள நடிகர் மோகன்லால், நடன இயக்குனர் பிரபு தேவா, சிவமணி, சமூக சேவகர் சின்னப் பிள்ளை, மேல்மலையனூர் பங்காரு அடிகளார் உள்ளிட்டோர் பத்ம விருதுகளை பெற்றனர்.

இதில் தமிழகத்தை சேர்ந்த 7 பேருக்கு பத்ம விருது அளிக்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள நபர்களுக்கு வருகின்ற 16 ஆம் தேதி வழங்கப்பட உள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of