CAA எதிர்ப்பு : வன்முறையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38ஆக அதிகரிப்பு

249

டெல்லியில் பல்வேறு இடங்களில் சி.ஏ.ஏ எதிர்ப்பு போராட்டக்காரர்களுக்கும், சி.ஏ.ஏ ஆதரவு போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் வாகனங்கள், கடைகள், கட்டிடங்கள் அடித்து உடைத்தும், தீ வைத்து எரித்தும் சேதப்படுத்தப்பட்டன.

வன்முறையில் ஈடுபட்டவர்கள் ஒருவரை ஒருவர் கற்களை வீசியும், கட்டையாலும் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இந்நிலையில் இந்த வன்முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38ஆக அதிகரித்துள்ளது.

படுகாயம் அடைந்தவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த வன்முறையில் பொதுச் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டதுடன், உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.

இதையடுத்து வன்முறை பாதித்த பகுதிகளில் போலீசார் மற்றும் துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டு, நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில், டெல்லியின் வடகிழக்கில் ஏற்பட்ட வன்முறை தொடர்பான வழக்குகளை விசாரிக்க 2 சிறப்பு புலனாய்வு குழுக்களை போலீசார் அமைத்துள்ளனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of