“பேச்சுவார்த்தைக்கு நாங்க ரெடி”- அமித்ஷா வீட்டை நோக்கி பேரணியாக சென்ற ஷாகீன் பாக் போராட்டக்காரர்கள்..!

564

மத்திய அரசு கொண்டு வந்த சி.ஏ.ஏ.வை திரும்ப பெறக்கோரி ஷாகீன்பாக் போராட்டக்காரர்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வீடு நோக்கி பேரணியாக சென்றனர்.


மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. டெல்லி ஷாகீன்பாக் பகுதியில் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.

கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பெண்களும், குழந்தைகளும் திரண்டு வந்து போராட்டங்களிள் பங்கேற்று வருகிறார்கள். இந்த போராட்டத்தை கொச்சைபடுத்தும் விதமாக பா.ஜ.க தலைவர்கள் சர்ச்சைக்குரிய கருத்துகளை டெல்லி தேர்தல் பிரசாரத்தில் தெரிவித்தனர்.

இதற்கிடையே ஷாகீன் பாக் பகுதியில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக நேற்று இரவு அறிவித்தனர். இதையடுத்து இன்று பிற்பகல் அவர்கள் பேரணியாக அமித்ஷாவின் வீடு நோக்கி சென்றனர்.

பேரணியாக சென்றதையடுத்து சிலருக்கு மட்டுமே அமித்ஷாவை சந்திக்க அனுமதியளிக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.ஆனால் போராட்டக்காரர்கள் நாங்கள் அனைவரும் செல்லவேண்டும் என கோரிக்கை வைத்ததையடுத்து அமித்ஷா வீட்டை நெருங்க விடாமல் காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of