டெல்லி வன்முறை : ஜனாதிபதிக்கு கடிதம் எழுதிய எதிர்க்கட்சிகள்

441

டெல்லியில் நடைபெற்ற வன்முறை நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த விஷயத்தில் மத்திய அரசு மீது எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளன. வன்முறைக்கு பொறுப்பேற்று உள்துறை மந்திரி அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில், தலைநகர் டெல்லியில் அமைதி திரும்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு எதிர்க்கட்சிகள் கடிதம் எழுதியுள்ளன. அதில், டெல்லியில் அமைதி திரும்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.