டெல்லி வன்முறையின் போது அமித்ஷா காணாமல் போய்விட்டார் – சிவசேனா விமர்சனம்

1019

இது தொடர்பாக அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில், டெல்லியில் சட்டப்பேரவை தேர்தலின்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் என்றும் ஆனால் தற்போது டெல்லியில் வன்முறையால் பல உயிர்கள் பறிபோனபோதும், பொது சொத்துகள், தனியார் சொத்துகள் சேதப்படுத்தப்பட்டபோதும் அமித் ஷாவை எங்கும் காண முடியவில்லை என சாடியுள்ளது.

இந்த நேரத்தில், மத்தியில், காங்கிரஸ் கட்சியோ அல்லது வேறு எந்த கட்சியோ ஆட்சியில் இருந்திருந்தால், மத்திய உள்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் என பாஜக பெரிய அளவில் கண்டன பேரணியை நடத்தியிருக்கும் என்றும் ஆனால் தற்போது பாஜக ஆட்சியில் இருப்பதால் அவ்வாறு எதுவும் நடக்கவில்லை
எனவும் தெரிவித்துள்ளது.

மேலும் டெல்லியில் நடந்த இவ்வளவு பெரிய வன்முறை குறித்து மத்திய அரசு
காலதாமத்துடன் பதில் அளிக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளது.