நீ அழகாக இல்லை, கணவனின் நாக்கை கடித்து துண்டாக்கிய மனைவி

346
delhi

டெல்லியின் புறநகர்ப் பகுதியான ரன்ஹோலா பகுதியை சேர்ந்த 22 வயது இளைஞர் தனது மனைவியுடன் வசித்து வந்தார். இவர் ஒரு தெருக்கூத்து கலைஞராக இருந்து வருகிறார்.

இவருக்கு கடந்த 2016 நவம்பரில் திருமணம் நடைபெற்றது, மேலும், அவரது 22 வயது மனைவி தற்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். இருப்பினும் அவரது கணவர் அழகாக இல்லாத காரணத்தால் அவரது மனைவிக்கு அவரை பிடிக்காமல் இருவருக்குமிடையே அடிக்கடி சண்டை, சச்சரவுகள் ஏற்ப்படுவதும் பின்னர் சமாதானம் ஆவதும் வாடிக்கையான நிகழ்வு என கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு, இளைஞரின் வீட்டிலிருந்து திடீரென அலறல் சத்தம் கேட்டுள்ளது. அவரின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் வீட்டுக்குள் சென்று பார்த்த போது நாக்கு துண்டான நிலையில், வாயில் ரத்தம் வழிய அந்த இளைஞர் கதறித்துடித்துள்ளார். பின்னர், அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

சம்பவம் அறிந்து வந்த போலீசார் விசாரித்த போது, சரியான தருனத்திற்காக காத்திருந்த மனைவி அவரது கணவர் முத்தம் கொடுக்கையில் கணவரின் நாக்கை கடித்து துண்டாக்கிய செய்தி தெரியவந்தது. இது போலீசாருக்கு பெரிய அதிர்ச்சி அளித்தது.

அவரது கணவரால் இனிமேல் சரியாக பேச முடியாது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here