பாலியல் கொடூரம் செய்ய சொன்ன ஆண்டி! மன்னிப்பு கேட்டார் பேஸ்புக்கில்!

1636

ஒரு உணவகத்துக்கு அரை குறை ஆடைகளுடன் சில பெண்கள் வந்துள்ளனர். அப்போது அங்கு வந்த நடுத்தர பெண் ஒருவர், அங்கிருந்த ஆண்களை அழைத்து இதுபோல் குட்டை ஆடை அணிந்து வரும் பெண்கள், நீங்கள் அவர்களை பார்க்க வேண்டும் என்பதற்காகவே அதுபோல் அணிந்துள்ளனர்.

எனவே அவர்கள் பலாத்காரம் செய்ய தகுதியானவர்கள் என்று அந்த பெண் தெரிவித்துள்ளார். அந்த பெண் கூறியதை கேட்டு குட்டை ஆடை அணிந்து வந்த இளம் பெண்கள் ஷாக்காகி விடுகின்றனர். இவ்வாறு கூறிவிட்டு அந்த பெண் அங்கிருந்த ஷாப்பிங் சென்டருக்கு செல்கிறார்.

அவர் பின்னாலேயே வீடியோ கேமராவை ஆன் செய்து விட்டு அந்த இளம் பெண்களும் செல்கின்றனர். அங்கு அந்த பெண்ணை மன்னிப்பு கோருமாறு கூறுகின்ரனர். எனினும் அந்த பெண் மன்னிப்பு கேட்க மறுத்துவிடுகிறார். இதனால் அந்த பெண்ணை சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்து வந்தனர்.

இந்நிலையில் அந்த பெண், அவரது பேஸ்புக் பக்கத்தில் மன்னிப்பு கேட்டுள்ளார்.
இதுகுறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் கூறுகையில்,

“நிபந்தனையில்லா மன்னிப்பை அனைத்து பெண்களிடமும் கேட்டுக் கொள்கிறேன். என்னுடைய கருத்தில் உள்ள தவறையும் கடுமையையும் நான் உணர்கிறேன்.

என்னுடைய கண்ணோட்டம் பிற்போக்குத்தனமாகவும் பழமையானதாகவும் இருப்பதை விட பாதுகாப்பாகவும் முற்போக்காகவும் இருக்க வேண்டும் என்பதை உணர்கிறேன்.

பொதுவெளியில் எனது கருத்தை கூறியது குறித்து வேதனை அடைகிறேன். மனைவியாக, சகோதரியாக, தாயாக ஒரு பெண்ணாக பெண்களின் கண்ணியத்தை நான் எப்போதும் மதிக்கிறேன்.

எனவே எனது கருத்தால் பல பெண்கள் மனதால் பாதிக்கப்பட்டவைக்கு மீண்டும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.”

என அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of