டெல்டா மாவட்டங்களுக்கு முதல்வர் 2 நாள் பயணம்..

154

வைரஸ் பாதிப்பு குறித்து டெல்டா மாவட்டங்களில் முதலமைச்சர் பழனிசாமி இன்று முதல் இரண்டு நாட்கள் நேரில் ஆய்வு மேற்கொள்கிறார்.

வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த முதலமைச்சர் பழனிச்சாமி பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து நேரடியாக சென்று ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். அதன்படி டெல்டா மாவட்டங்களில் இன்றும், நாளையும் ஆய்வு செய்ய உள்ளார். இன்று காலை கடலூர் மாவட்டத்திற்கு செல்லும் முதலமைச்சர் பழனிசாமி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைரஸ் தடுப்பு பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.

பின்னர், 22 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் முதலமைச்சர், முடிவுற்ற 33 திட்டப் பணிகளை துவக்கி வைக்க உள்ளார். இதையடுத்து மதியம் நாகை மாவட்டம் செல்லும் முதலமைச்சர் பழனிசாமி, மாவட்ட ஆட்சியர்கள், சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள் உள்ளார். நாளை காலை திருவாரூர் மாவட்டத்திலும், மதியம் தஞ்சாவூர் மாவட்டத்திலும் வைரஸ் பாதிப்பு குறித்தும், அதனை கட்டுப்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு செய்ய உள்ளார்.