டெல்டா மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

550

தென்மேற்கு வங்கக் கடல்பகுதியில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் டெல்டா மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வங்க கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று தென் மேற்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால், கடலூர், நாகப்பட்டினம், காரைக்கால், திருவாரூர் மற்றும் தஞ்சை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவ்ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வரும் 20 மற்றும் 21 தேதிகளில் தென் மேற்கு வங்க கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என்று மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.