டெல்டா மாவட்டங்களில் நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படும் – செங்கோட்டையன்

396

டெல்டா மாவட்டங்களில் நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளி கல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்,

தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் முழுவதும் பெரும் பாதிப்பிற்க்குள்ளான நிலையில், அனைத்து டெல்டா மாவட்டங்களிலும் நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று கூறினார், புயலால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு புதிய புத்தகங்கள் நாளை மாலை பள்ளிகளில் வழங்ப்படும் என்று தெரிவித்தார், மேலும் பள்ளிகளுக்கு விரைவில் மின்சாரம் வழங்கப்படும் என்றும், பள்ளிகளில் விழுந்த மரங்களில் 70 சதவீதம் மரங்கள் அகற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார், பள்ளிகளில் உள்ள மரங்களை அகற்றும் பணியில் 45 குழுக்கள் ஈடுபட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

 

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of