“சுவையோ எம்மி.. சாப்பிட்டால் சனி..” புல்கா சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்..! அதிர்ச்சி ரிப்போர்ட்..!

2592

ஆரோக்கியத்திற்காக உணவு உட்கொண்ட காலம் மாறி, தற்போது சுவைக்காக மட்டுமே உணவு உட்கொள்ளும் காலம் வந்துவிட்டது. அப்படி உட்கொள்ளும் ஒரு உணவால் கேன்சர் நோய் வருவதாக கூறப்படுகிறது. அது எந்த உணவு என்பதை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கோதுமை மாவை வைத்து தயாரிக்கப்படும் உணவு பொருட்களில் முக்கியமான ஒன்று புல்கா, சப்பாத்தி வகையை சேர்ந்த புல்கா, பெரும்பாலும் அனைவரும் விரும்பி உண்ணும் உணவாக உள்ளது.

அதற்கு காரணம் புல்காவின் தனிச்சுவை, புல்காவை பொருத்தவரையில் கேரளா மற்றும் வட இந்தியாவில் அதிகம் சாப்பிடும் உணவாக உள்ளது. சாதாரண சப்பாத்தியை பொருத்த வரையில் அடுப்பின் மீது கல் வைத்து அதன் மூலம் சுடப்படுகிறது.

ஆனால் புல்கா வை பொருத்தவரையில் நெருப்பில் நேரடியாக சுடப்படுகிறது. அடுப்பில் கல் வைத்து சுடும் சப்பாத்தியை விட, நெருப்பில் சுடும் சப்பாத்தி வகையை சேர்ந்த புல்காவிற்கு சுவை அதிகம்.

ஆனால் சுவையை மட்டுமே பார்க்கும் பலர் அதில் உள்ள ஆபத்தை அறிவதில்லை, புல்கா பிரியர்களாக நீங்கள் இருந்தால், நீங்கள் ஆசைப்பட்டு வாங்குவது புல்காவை மட்டும் அல்ல, அதனோடு சேர்த்து கேன்சர் என்ற கொடிய நோயையும் தான், ஆம் நெருப்பில் நேரடியாக சுடப்படும் புல்காவை உட்கொண்டால் கேன்சர் வரும் என்கிறது ஆய்வு அறிக்கை.

லண்டன் கேன்சர் institute socity நடத்திய ஆய்வில் இந்த அதிர்ச்சிகரணமாக உண்மை வெளியாகி இருக்கிறது. தற்போது பெரும்பாலும் வீடுகள் மற்றும் ஹோட்டல்களில் சமையல் எரிவாயு அடுப்பின் மூலமாக புல்கா சுடப்படுகிறது.

அப்படி சுடும்போது அந்த நெருப்பில் பாலிசைகில் அரோமெட்டிக் ஹ்ட்ரோகார்பன் என்ற வேதிப்பொருள் உருவாகி, அதிலிருந்து நெப்தலின் என்ற வேதிபொருள் நேரடியாக நெருப்பில் சுடும் உணவு பொருட்களில் கலக்கிறது.

இந்த நெப்தலின் என்ற வேதிப்பொருள் உணவு வழியாக உடலுக்கு சென்று குடல் கேன்சருக்கு வழி வகுக்கிறது. மேலும் இதோடு ஆபத்து முடிவதில்லை புல்காவை நெருப்பில் சுடும்போது வரக்கூடிய புகையில் ஆல்டிஹைக் என்ற வேதிப்பொருள் கலந்து வருகிறது.

இதனால் மரபணு கோளாறு ஏற்பட்டு கேன்சர் வருவதற்கும் வாய்ப்பு உள்ளதாக அய்வறிக்கை குறிப்பிட்டுள்ளது. நெருப்பில் நேரடியாக சுடப்படும் புல்காவில் மட்டும் தான் ஆபத்தா என்று தவறாக நினைக்கவேண்டாம்.

எரிவாயு நெருப்பின் மூலமாக சிக்கனை நேரடியாக சுட்டு பல சுவையான உணவுள் பலபேரின் விருப்ப உணவாக உள்ளது. அப்படி இருக்ககூடிய அனைத்திலும் பாரபட்சம் இல்லாமல் இந்த ஆப்பத்து உள்ளது என கூறுகிறார்கள ஆராய்சியாளர்கள். நாம் உண்ணும் உணவு ஆரோக்கியமற்ற உணவாக இருந்தாலும் பரவாயில்லை, நோயை உண்டாக்கும் உணவாக இருக்ககூடாது. அன்பு எச்சரிக்கையுடன் சத்தியம் செய்திக்குழு

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of