பணமதிப்பு இழப்பீடு மக்களின் நன்மைக்காக பிரதமர் எடுத்த முடிவு – தமிழிசை

304

தூத்துக்குடி மக்களவை தொகுதி பா.ஜனதா வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் நாசரேத் மற்றும் அதன் சுற்று பகுதிகளில் தீவிரமாக பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர்

அனைத்து மக்களுக்கும் மோடி பாதுகாப்பாக இருந்து வருகிறார். பணமதிப்பு இழப்பீடு மக்களின் நன்மைக்காக பிரதமர் மோடி எடுத்த முடிவாகும்.

பாமர மக்களின் வரி பணம் வீணாகாமல் அவர்களிடமே சேருவதற்காகத்தான் இதனை செய்துள்ளார். பிரதமர் மோடிக்கு குடும்பம், பிள்ளைகள் என யாருமே கிடையாது. உண்மையான தலைவர் பெருந்தலைவர் காமராஜர் உயிரோடிருந்திருந்தால் இந்த செயலை பாராட்டியிருப்பார் என்று கூறினார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of