“ஐயயோ இப்படி ஆயிடுச்சே..” அரசு மருத்துவருக்கே டெங்கு..! இறுதியில் நேர்ந்த விபரீதம்..!

918

தமிழகத்தை அச்சுறுத்தி வரும் நோய்களில் டெங்குவும் ஒன்று. பருவமழை ஆரம்பித்ததில் இருந்து, டெங்கு காய்ச்சலும் வேகமாக பரவி வருகிறது. இந்த டெங்கு கொசுவால், குழந்தைகள் உட்பட பல பேர் உயிரிழந்து வருகின்றனர்.

இந்நிலையில், மதுரை மாவட்டம் விசாலாட்சிபுரத்தை சேர்ந்தவர் மருத்துவர் பிருந்தா. இவர் அரசலூர் ஆரம்பச் சுகாதார நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டதால், தனியார் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்துள்ளார்.

அதில் டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்ட அவர், காய்ச்சலுக்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

டெங்கு நோயால், அரசு மருத்துவரே உயிரிழந்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement