காய்ச்சல்கள் தொடர்பான நிலைமை கட்டுக்குள் உள்ளது – விஜயபாஸ்கர்

707

சென்னை ராயப்பேட்டையில் காய்ச்சல் தடுப்பு பணிகளை சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், பருவநிலை மாற்றத்தால் காய்ச்சல் வருவது சகஜம்தான் என்றும், காய்ச்சல் வந்தால் அலட்சியமாக இல்லாமல் உடனடியாக மருத்துவமனைக்கு சென்றால் ஆபத்து இல்லை எனவும் தெரிவித்தார்.

மேலும், டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்தக்கூடியதுதான் என்று கூறிய அமைச்சர் விஜயபாஸ்கர், வெளியில் சென்று வந்தால் அனைவரும் கை கழுவும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டாலே 80 சதவீதம் நோய் பரவுவது தடுக்கப்படும் என்றும், தீபாவளியன்று வெளியூர் செல்பவர்கள் வீட்டுக்குள் நுழைந்த உடனேயே கைகளை கழுவி கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

Advertisement