இங்கிலாந்தை கடுமையாக தாக்க உள்ள டென்னிஸ் புயல்

285

இங்கிலாந்தை Dennis புயல் கடுமையாக தாக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இங்கிலாந்து நாட்டில் கடந்த வார இறுதியில் சியாரா புயல் தாக்கியது. இதனால் வடஇங்கிலாந்தில் ராணுவ படைகளை அந்நாட்டு ராணுவ அமைச்சகம் குவித்தது. இந்த புயல் கடந்த வாரம் கடும் பாதிப்பினை ஏற்படுத்திய நிலையில், Denis என்ற புதிய புயல் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

இது பற்றி இங்கிலாந்து நாட்டின் அரசு வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்பில், கடுமையான பாதிப்பினை ஏற்படுத்தும் வகையில் Denis புயல் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. காற்று வேகமுடன் வீசுதல் மற்றும் கடும் வெள்ளப்பெருக்கு ஆகியவற்றால் பொருட்சேதம் ஏற்படுவதுடன் சாலைகளும் மூடப்படும் சூழல் ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஆயுத படைகள், உள்ளூர் அதிகாரிகள் மற்றும் குடியிருப்பு வாசிகளுக்கு ஆதரவு தேவைப்படும் பொழுது உதவ தயாராக உள்ளதாக ராணுவ அமைச்சர் பென் வாலஸ் கூறியுள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of