டெபாசிட் காலி-னா என்னனு தெரியுமா?

1409

தேர்தல் வரும் நேரங்களில், டெபாசிட் காலி ஆகக் கூடாது, டெபாசிட் வாங்கிட்டோம் என்று அரசியல்வாதிகள் கூறி நாம் கேட்டிருப்போம் அல்லது கேள்விபட்டிருப்போம். ஆனால் டெபாசிட் காலி என்றால் என்ன என்று நம்மில் பலருக்கு தெரியாது என்பது மறுக்க முடியாத உண்மை. இதுகுறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு….

எப்போது தேர்தல் நடந்தாலும் அதில் ஒருவருக்கு மட்டுமே வெற்றி. இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. ஆனால் தோல்வி அடையும் மற்றவர்கள், அந்த தோல்வி கவுரவமாக இருக்க வேண்டும் என என்னுகின்றனர்.

அந்த கவுரவமான தோல்வியே டெபாசிட்டை தக்க வைத்துக் கொள்வது. இன்னும் விளக்கமாக கூறினால், ஒரு வேட்பாளர் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்யும் போது வைப்புத் தொகை செலுத்துவார்கள்.

அப்படி செலுத்தப்படும் அந்த வைப்புத் தொகை தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்படும். தோல்வி அடைந்தவர்களுக்கும் அந்த வைப்புத் தொகை மீண்டும் தரப்படும்.

ஆனால் அவர்கள் போட்டியிடும் தொகுதியில் ஆறில் ஒரு பங்கு வாக்குகளை பெற்றிருக்க வேண்டும். அதவாது ஒரு தொகுதியில் 6 லட்சம் வாக்காளர்கள் இருப்பின் தோல்வி அடையும் வேட்பாளர்கள் 1 லட்சம் வாக்குகளை கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.

அப்போது தான் அவர்கள் செலுத்திய வைப்புத் தொகை திருப்பித் தரப்படும். இதுவே டெபாசிட் பெறுவது ஆகும். நாடாளுமன்ற தேர்தலில் வேட்புமனுத் தாக்கல் செய்பவர் 25 ஆயிரம் ரூபாயும், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுபவர் 10 ஆயிரம் ரூபாயும் வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும்.

தாழ்த்தப்பட்ட பிரிவை சேர்ந்தவர்கள் மேற்கண்டவற்றில் பாதியை செலுத்தினால் போதுமானது. இந்த டொபாசிட்டை இழக்கும் விவாகரத்தில் பெரும்பாலும் முன்னனி கட்சிகள் இடம் பெறுவதில்லை. சில நேரங்களில் மட்டும் ஒரு சில முக்கிய கட்சிகள் இதில் சிக்கி விடுகின்றன.

இன்னும் தேர்தல் குறித்து நாம் அறியாத பல்வேறு விஷயங்கள் உள்ளது. இதற்கு தேர்தல் பற்றி போதிய விழிப்புணர்வு இல்லாததே முக்கிய காரணம் என சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of