லண்டனில் ‘தீபிகா படுகோனே’-விற்கு அழகிய மெழுகு சிலை.., திறந்து வைத்தது?

232

பத்மாவத் படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் ரன்வீர் சிங்கும், தீபிகாவும் திருமணம் செய்துக்கொண்டனர். பாலிவுட்டில் தனக்கென்று ஒரு பாணியை உருவாக்கி கோலோச்சி நிற்கும் தீபிகா படுகோனேவிற்கு லண்டனில் உள்ள மடமே துசாட்ஸில் மெழுகு சிலை வைத்துள்ளனர்.

இந்நிலையில் அவரது மெழுகுச்சிலையை திறந்து வைக்க, காதல் கணவர் ரன்வீர் சிங் மற்றும் தனது குடும்பத்தினருடன் லண்டன் பறந்து சென்றார். இதையடுத்து தனது குடும்பத்தினர் முன்னிலையில் தனது மெழுகுச்சிலையை தீபிகா படுகோனே திறந்து வைத்து நெகிழ்ச்சி அடைந்தார். ஊடகங்கள் எதுவும் இல்லாத நிலையில் தனது இன்ஸ்டாகிராமில் இதனை லைவ்வாக பதிவு செய்துள்ளார்.வெள்ளை உடையில் அந்த அழகான மெழுகுச்சிலையை பார்த்து ரசித்த தீபிகா, இதனை உருவாக்கியவரிடம் நான் அதை வீட்டுக்கு எடுத்துச் செல்லலாமா?” என்று கேட்டுள்ளார். அதற்கு, மீண்டும் அடுத்த முறை நீங்கள் வரும் வரை உங்கள் நியாபகங்களாய் இந்த அழகு நிறைந்த மெழுகு சிலை இங்கே இருக்கட்டும் என தெரிவித்தார்.

மேலும், தீபிகா அருகில் அந்த சிலை நிற்பதை பார்த்து இரட்டை சகோதரிகள் என்றும் ரசிகர்கள் கமாண்ட் செய்து வருகின்றனர்.தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of