மழைநீர் சேமிப்பு தொட்டிகளின் நிலை தொடர்பாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் ஆய்வு

318

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி சுனாமி குடியிருப்பு மற்றும் புதுச்சேரி மத்திய பல்கலைகழகத்தில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேமிப்பு தொட்டிகளின் நிலை தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஏரி குளம் தூர்வாரும் மழைநீர் சேமிப்புக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றார். இந்நிலையில் காலாப்பட்டு சுனாமி குடியிருப்பில் கடந்த ஆண்டு இரண்டு மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் தன்னார்வுத் தொண்டு நிறுவன உதவியுடன் அமைக்கப்பட்டன.

கடந்த 3 நாட்களாக புதுச்சேரியில் மழை பெய்துள்ள நிலையில் அந்த மழை நீர் தொட்டிகள் எந்த நிலையில் உள்ளன என துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஆய்வு செய்தார். தொடர்ந்து புதுச்சேரி பல்கலைக் கழகத்திற்கு சென்ற அவர் வாயில் 1 மற்றும் வாயில் 2 ஆகிய பகுதிகளில் உள்ள நான்கு மழைநீர் சேமிப்புத் தொட்டிகளை பார்வையிட்டார்.

 

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of