பதவியேற்ற ஒரே வாரத்தில் மாரடைப்பால் உயிரிழந்த பெங்களூரு மாநகராட்சி துணை மேயர்

898

பெங்களூரு மாநகராட்சி துணை மேயர் ரமீலா உமாசங்கர் (44). கடந்த மாதம் 28-ந் தேதி தான் துணை மேயராக பதவியேற்றார். இந்நிலையில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக ரமீலா உமாசங்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ரமீலாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

மறைந்த ரமீலா உமாசங்கர் பெங்களூரு மாநகராட்சி காவேரிபுரா வார்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். துணை மேயராக பதவியேற்று ஒரு வாரமே ஆன நிலையில் ரமீலா உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே உமாசங்கரின் மறைவுக்கு கர்நாடக முதல்வர் குமாரசாமி, முன்னாள் பிரதமர் தேவகவுடா மற்றும் பல்வேறு கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of