இது ஒரு Playboy-ன் கதை..,! சிறப்புத் தொகுப்பு..!

879

பிளே பாய் என்ற சொல் எப்படி வந்தது, எதனால் ஒரு குறிப்பிட்ட ஆண்களை மட்டும் பிளே பாய் என்று கூறுகின்றனர். இதற்கெல்லாம் பிளே பாய் என்ற பத்திரிக்கையை உருவாக்கிய யுஜ் எஃப்னர் தான் காரணம். இதுகுறித்த விரிவான தொகுப்பை தற்போது காணலாம்..,

அமெரிக்காவில் நடுத்தர குடும்பம் ஒன்றில் 1926- ஆம் ஆண்டு அன்று இரண்டாவது மகனாக பிறந்தவர் யுஜ் எஃப்னர். இவருக்கு ஒரு அண்ணனும், ஒரு தம்பியும் உடன் பிறந்தவர்கள். சிறு வயதில் இருந்தே எழுதுவதில் அதிக ஆர்வம் கொண்ட யுஜ் எஃப்னர், தான் ஒரு இதழியலாளர் ஆக வேண்டும் என்று ஆசைக்கொண்டிருந்தார்.

இதனால் எஸ். ஸ்கொயர் என்ற பிரபல பத்திரிக்கை ஒன்றில் துணை ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்த இதழ் ஆண்களுக்கு மட்டுமான மிகவும் பிரபலமான இதழாக, 1940-களில் இருந்து வந்தது. இந்த இதழில் ஒரு ஆண் மிகவும் முரடனாகவும், வலிமை வாய்ந்தவனாகவும் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டு வந்தது.

இதை மாற்ற நினைத்த யுஜ் எஃப்னர், ஆணை மிகவும் மென்மையானவனாக காட்ட நினைத்தார். இந்த கருத்தை, தனது நிறுவனத்தில் கூறிய போது, இது நம் நாட்டு மக்களால் ஏற்றுக்கொள்ளப்படாது என்று அவரை உதாசினப்படுத்தினார்கள். இதையடுத்து தனது வேலையை ராஜுனாமா செய்ய முடிவெடுத்த யுஜ் எஃப்னர், தனது சொந்த முயற்சியில் ஒரு இதழை தொடங்க முடிவு செய்தார்.

பல இடங்களில் கடனை வாங்கி இதழை தொடங்கிய அவர், இதழுக்கு பிளே பாய் என்ற பெயரை சூட்டினார். பின்னர், இதழை எல்லோரிடமும் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில், பிரபல ஹாலிவுட் நடிகையான மெர்லின் மண்ரோவின் மிகவும் கவர்ச்சியான புகைப்படத்தை அட்டைப்படமாக பயன்படுத்தி இதழை வெளியிட்டார்.

இதழ் வெளியானதும் மெர்லின் மண்ரோவின் மிகவும் கவர்ச்சியான புகைப்படத்திற்காகவே, அதிக நபர்களால் வாங்கப்பட்டது. இந்த இதழ் வெளியான சில நாட்ககளிலேயே, பல முன்னணி இதழ்களுக்கு போட்டியாக அமைந்தது. இதனைத்தொடர்ந்து பிளே பாய் இதழ் அசுர வளர்ச்சி அடைந்து மாபெரும் வெற்றி பெற்றது.

அந்த இதழ் வெளியாவதற்கு முன்பு வரை அமெரிக்காவில், ஒரு ஆண் ஒரு பெண்ணை மட்டும் தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருந்து வந்தது. ஆனால் அந்த இதழ் வெளியானப் பிறகு அமெரிக்காவின் மொத்த கலாச்சாரமும் முற்றிலும் மாற்றியமைக்கப்பட்டது. இந்த இதழ் அமெரிக்காவில் பெரும் கலாச்சார புரட்சியையே உருவாக்கியது.

பெரும்பாலும் தான் மேற்கொண்ட வாழ்க்கை முறையையே யுஜ் எஃப்னர் அந்த இதழில் எழுத்து மூலமாக காட்டினார். இறுதியாக  யுஜ் எஃப்னர் கடந்த 2017-ஆம் ஆண்டு அன்று மறைந்தார். இன்றும் ஆண்களுக்கான பிரத்யேக ஆங்கில இதழ்களில் முண்ணனியில் இருக்கும் பிளே பாய், தற்போது பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்து வருகிறது.