மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு திருப்பம்..! ஆட்சியமைத்த பாஜக..! அதிர்ச்சியில் சிவசேனா..!

1587

மகாராஷ்டிர சட்டசபை தேர்தலில், பாஜக மற்றும் சிவசேனா ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்லை சந்தித்தது. இதில் இந்த இரண்டு கட்சிகளும் இணைந்து அபார வெற்றி பெற்றது. ஆனால், முதல்வர் பதவி யாருக்கு என்ற போட்டியில், இரண்டு கட்சியாளும் ஆட்சியமைக்க முடியவில்லை.

இதனால் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய 2 கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்க சிவசேனா கட்சி தீவிரம் காட்டி வந்தது. இதற்காக சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.

இதனால் சிவசேனா தலைமையில் கூட்டணி ஆட்சி அமைவது கிட்டத்தட்ட உறுதியானதாகவே கருதப்பட்டது. ஆனால் திடீரென இன்று காலை பாஜக மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்துள்ளது.

பாஜகவின் அம்மாநில தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராகவும், தேசியவாத காங்கிஸ் கட்சியின் தலைவர் அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவியேற்றுள்ளனர். ஒரே இரவில் இந்த திடீர் மாற்றம் எப்படி ஏற்பட்டது என அரசியல் ஆர்வலர்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.

அதேசமயம் பாஜகவை ஓரங்கட்ட நினைத்த காங்கிரசும் சிவசேனாவும் அதிர்ச்சியில் உறைந்துள்ளன. தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சில தினங்களுக்கு முன்பு பிரதமர் மோடியை சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of