“கடவுள் ஓய்வு கொடுத்துள்ளார்..” தேவேந்திர பட்னாவிஸ் கொடுத்த ஷாக்..!

2517

மகாராஷ்டிர மாநிலத்தில் சென்ற ஆட்சியின்போது முதல்வராக இருந்தவர் தேவேந்திர பட்னாவிஸ். பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருக்கும் இவர், தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், லாக்டவுன் ஆரம்பித்த காலம் தொட்டு, ஓயாமல் உழைத்து வந்தேன். தற்போது கடவுள் எனக்கு ஓய்வு அறிவித்துள்ளார்.

பெருந்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், தனிமைப் படுத்தப்பட்டுள்ளேன். மருத்துவர்களின் அறிவுரையின் படி, முறையான சிகிச்சை பெற்று வருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

தேவேந்திர பட்னாவிஸ்-க்கு பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் கட்சி தொண்டர்கள் ஷாக்கில் உள்ளனர்.

Advertisement