முத்தையா பொய் சொல்றார்! அவர் அந்த படம் தான் எடுக்குறார்! தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா!

717

சசிகுமார் மற்றும் லட்சுமி மேனன் நடித்த குட்டிப்புலி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் முத்தையா. இவர் கொம்பன், மருது, கொடி வீரன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

பொதுவாக இவர் ஒரு குறிப்பிட்ட சமுகத்தை சார்ந்த வாழ்வியலை மட்டும் இயக்குகிறார் என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இந்நிலையில் இவர் தேவராட்டம் என்ற படத்தை கௌதம் கார்த்திக்கை ஹீரோவாக வைத்து இயக்கி முடித்துள்ளார்.

அந்த படத்தின் டெக்னீசியன்களுடன் ஒரு செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் பேசிய இயக்குநர், இது சாதி படம் அல்ல, இது உணர்வுபூர்வமான படம், இது அக்கா மற்றும் தம்பிக்கான உறவை எடுத்துக்கூறும் திரைப்படமாக இருக்கும் என்று பேசினார்.

இதனைத்தொடர்ந்து பேசிய தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, இது சாதி படம் தான், இயக்குநர் பொய் சொல்கிறார். அவர் அவருடைய வாழ்வியலை எடுக்கிறார். இதில் தவறு இல்லை. என்று கூறினார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of