சென்னை கூடுதல் டி.ஜி.பி. ராஜீவ் குமாருக்கு கொரோனா

58

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் கொரோனாவின் தாக்கம் சற்று அதிகரித்தே காணப்படுகிறது.

இதனிடையே, மக்களை தாண்டி பாதுகாப்பு மற்றும் நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் என பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ஊர்க்காவல்படை கூடுதல் டி.ஜி.பி. ராஜீவ் குமாருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதை அடுத்து அவர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது வரை சென்னையில் ஆயிரத்து 300 க்கு மேற்பட்ட காவலர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of