கல்யாணம் செய்யப்போகும் போலீஸ்காரர்களுக்கு முக்கிய அறிவிப்பு…! டிஜிபி சுற்றறிக்கை…!

625

மதுரையைச் சேர்ந்த சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் தன் மீதான தனிப்பட்ட வரதட்சணை பிரச்சனை மீதான புகாருக்காக இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பின் போது,

“எந்த பொது ஊழியராக இருப்பினும் குற்றவியல் வழக்கில் விதிவிலக்கு அளிக்க முடியாது. அரசு ஊழியர்கள் தூய்மையானவர்களாக இருக்க வேண்டும்.

பரிசுப்பொருட்கள், வரதட்சணை பெறுவது போன்றவை காவல்துறை நடத்தை விதி 4-க்கு எதிரானது.இது தடுக்கப்பட வேண்டும்.

எனவே காவல்துறையில் பணியாற்றுபவர்கள் பூங்கொத்துகள், பரிசுப்பொருட்கள், வரதட்சணை பெறுவதை தடுக்கவும், காவல்துறை நடத்தை விதிகளை கடுமையாக பின்பற்றுவது தொடர்பாக தமிழக காவல்துறை டி.ஜி.பி. 6 வாரத்திற்குள் அனைத்து காவல் அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்.”

என உத்தரவிட்டு இருந்தது.

அதன்படி இன்று தமிழக காவல்துறை டிஜிபி திரிபாதி, காவல்துறை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.