ஷீட்டிங் தொடங்கிய 4 நாட்களில் அப்டேட்.. வியக்க வைத்த “D44” படக்குழு..!

668

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கர்ணன் மற்றும் ஜகமே தந்திரம் திரைப்படங்கள், பின்னணி வேலைகள் முடிந்து ரிலீஸ்-க்கு தயாராகி வருகின்றன.

இதையடுத்து, துருவங்கள் 16, மாஃபியா ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் நரேனுடன் இணைந்துள்ள தனுஷ், தற்போது அப்படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார்.

இந்த படத்தின் ஷீட்டிங் தொடங்கிய 4 நாட்களிலேயே, படம் தொடர்பான அப்டேட் வெளியாகியுள்ளது.

அதாவது, அப்படத்தின் குறிப்பிட்ட பாடல் ஒன்றின் படப்பிடிப்பு முடிந்துள்ளதாக நடன இயக்குநர் ஜானி தெரிவித்துள்ளார். அந்த பாடலை தனுஷ் பாடியுள்ளதாகவும் அவர் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

Advertisement