தனுஷ் உடன் மோத வரும் சந்தானம்..!

1158

பெருந்தொற்று பரவல் காரணமாக நீண்ட நாட்களாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள், மாஸ்டர் படத்தின் ரிலீசிற்கு பிறகு, புது பொழிவு பெற்றன. இதனால், மற்ற படங்களும் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.

அந்த வகையில், நடிகர் தனுஷ் நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், உருவாகியுள்ள ஜகமே தந்திரம் திரைப்படம், வரும் பிப்ரவரி மாதம் 12-ஆம் தேதி அன்று வெளியாக உள்ளது.

இந்நிலையில், தனுஷ்-க்கு போட்டியாக, நடிகர் சந்தானம் நடித்துள்ள பாரிஸ் ஜெயராஜ் என்ற திரைப்படமும் வெளியாக இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன. ஏ1 பட இயக்குநர் ஜான்சன் இயக்கியுள்ள இந்த திரைப்படத்திற்கு, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

Advertisement