நெற்றிக்கண் ரீமேக் சர்ச்சை..! ஃபுல் ஸ்டாப் வைத்த தனுஷ்..!

372

நடிகர் தனுஷ் நெற்றிக்கண் படத்தின் ரீமேக்கில் நடிப்பதாக தகவல் வெளியானது. இந்த தகவலை அறிந்த கதையாசிரியர் விசு, தனுஷ் நெற்றிக்கண் படத்தை ரீமேக் செய்வதாக இருந்தால், அப்படத்தின் கதையாசிரியரான தன்னிடம் உரிமம் பெற வேண்டும் என்றும், அவ்வாறு இல்லையென்றால் வழக்கு தொடர்வேன் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இவ்வாறு விசு கூறியிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தனுஷ் இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இதுகுறித்து கதையாசிரியர் விசுவுக்கு போனில் அழைப்பு விடுத்த நடிகர் தனுஷ், தான் நெற்றிக்கண் ரீமேக் படத்தில் நடிக்கவில்லை என்றும், அதுதொடர்பான தகவல் அனைத்தும் வதந்தி என்றும் தெரிவித்துள்ளார்.

நிருபர் ஒருவர் ரஜினிகாந்த் நடித்த படங்களில் ஏதாவது ஒரு படத்தில் நீங்கள் நடிக்க வேண்டும் என்று நினைத்தால் எந்த படம் என்று கேட்டார். அதற்கு நெற்றிக்கண் என்று பதில் அளித்தேன் என்றும் விசுவிடம் நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of