“தினுசு.. தினுசா கிளம்புறாங்களே..” கர்ணன் படத்தில் எடுக்கப்பட்ட அந்த காட்சி..! கமிஷனர் அலுவலகத்தில் புகார்..!

367

பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைத்தொடர்ந்து, இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கும் அடுத்த திரைப்படம் கர்ணன். நடிகர் தனுஷ், யோகிபாபு உட்பட பல்வேறு நடிகர்கள் நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுவெனு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தமிழ்நாடு முக்குலத்தோர் புலிப்படையினர் நெல்லை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர்.

அதில், 1991-ம் ஆண்டில் நடந்த கொடியன்குளம் மணியாச்சி சாதி கலவரத்தை மையப்படுத்தி எடுத்து வருகின்ற கர்ணன் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்த படத்தில் மணியாச்சி போலீஸ் நிலையத்தை தாக்குவது போன்ற காட்சி இடம் பெற்று உள்ளதாக கூறப்படுகிறது. இது காவல்துறை கண்ணியத்தை கெடுப்பதாக உள்ளது என்றும் அவர்கள் அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of